arulsothidam@bluewin.ch

Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

கவிதைகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்  - இனியும் தூங்காதே


பொங்கலோ  பொங்கல்  2021 தமிழர்  துயர் நீங்க எனப் பொங்கு
தமிழர் தலை நிமிர்ந்து வாழ என பொங்கு
தனித்துவமானது எமது மொழி என பொங்கு
தங்கத்தைவிட  உயர்ந்தது எமது பண்பாடு என பொங்கு
தரணியில் தமிழன் உ ரிமையோடு  வாழ  என பொங்கு

சக்தி தரும் சூரிய பகவான்  தமிழரை இன்று உதயத்தில் வாழ்த்த
புத்தி தரும் சிந்தனை தரும் சந்திரன் இனிய இரவில் தமிழை வாழ்த்த
மிகுதி ஏழுகிரகங்களும் வரம் தந்து வீரத்தோடு தமிழ் மக்கள்  வாழ என வாழ்த்த
அதற்காக  ஒன்றுபடு  நின்றுதடு   உறுதியொடு வென்றுவிடு
உன் இழந்த உரிமையை  மீண்டும் பெற ஒற்றுமையை உன்  கையில் எடு

நிலமும் நின்மதியும்  பறிபோனது இனி இழப்பதற்கொன்றுமில்லை
தொழிலும் உடமைகளும் அழிந்துபோனது கொடுப்பதற்கு யாருமில்லை
மழையும் காற்றும்  தண்ணீரால் நிறம்பி உறங்கக்கூட முடியவில்லை
தைப்பூச நாயகனே  முருகா  தைப்பூசத்தில் ஒரு விடிவைத் தாரும்
உன் வரவே  எம் விடிவு அதனாலே பொங்குகின்றோம்  நம்பிக்கையோடு நீயே எழுந்து வா

கிழக்கில் உறுதி வார்த்தைகள் பல ஆண்டுகளாக காற்றில்  பறக்கிறது
வடக்கில்  அதிகார அட்டகாசம்  போடுகிறது அரசிற்கு இவை தெரியாதாம்
தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும் இதயமில்லாதவர்கள் ஆளுகின்றார்கள்
நீதியற்றவர்கள்  தீர்ப்பிடுகின்றார்கள்  குற்றவாளிகள் விடுதலை -நிரபராதிகள்  சிறை
இது என்ன அரசன் ஆட்சியா - மக்களுக்கான ஆட்சியா – அட்டூழியம் இது அழியப்போகிறது

இனியும்  உலகம் வேடிக்கை பார்க்கக் கூடாது
இந்தியா  கைகட்டிக் கொண்டு நிற்கக்கூடாது
இறைவா நீரும் நீண்ட மௌனம் காக்கக் கூடாது   
தமிழா இப்போ உன் சந்ததியைக் காக்கத் தவறக்கூடாது
தர்மம்  நிற்சயம் வெல்லும்  தமிழர் வரலாறு நல்லதாக மாறும்

தமிழா நீ  ஒன்று படு  கோடரிக்காம்பாய் மாறாதே
பணம் பதவியை விட உன் இனம் சந்ததி என நினைத்துப்பார்
நீயும் தமிழனாகப் பொங்கு   உண்மைத் தமிழனாக மாறு
தமிழன் வெல்லும் ஆண்டு 2021ம் ஆண்டே

நீ மகிழ்வாய் பொங்கு தமிழா………   
                                         
கவிஞர் - அருள் தெய்வேந்திரன்   சுவிசர்லாந்து


பொங்கலோ பொங்கல் 2021

தமிழா நீ இனி வெல்வாய்
இறைவன் உன்னோடு தான் இனி நிற்பார்
துணிந்த நில் தொடர்ந்து செல்  இனி காலம் கனியும்


தை பொங்கல்
தமிழரின் திருநாள்
உழவரின் திருநாள்
விவசாயின் திருநாள்
இன்று ஏழையின் திருநாள்…….
பொங்கி உண்ண முடியவில்லையே….
தைப்பிறந்தால் வழி பிறக்கும்

மக்கள் வாழ தேவையானவைகளை உற்பத்தி ஆக்குபவர்கள் பெருநாள்
அதற்கு முக்கியமானவர் கதிரவனே
கதிரவனை துதிப்பது
பசுக்கள், காளைகளை மதிப்பது
கூடி உண்ணுவது,
கூடி மகிழ்வது,
கூட விழையாடுவது
ஒற்றுமை, வீரம், அன்பு விளைவது
இந்த திருநாளில் தானே …..
காலம் தமிழருக்கு வழியமைக்கும்.

அதனால்,
இனிக்கும் பொங்கல் சாப்பிட்டு
இனிமையாகப் பேசி
மகிழ்வதே இந்த நாள் தான்
பகை மறப்பது, சுகம் விசாரிப்பது,
உதவி செய்வது, உறவை வளர்ப்பது
விருந்தோம்பல் செய்வது, பணிவன்பை வளர்ப்பது
போன்ற பண்புகளை பொருக்குவதும் இத் திருநாள் தானே  
பண்பாட்டின் திருநாள்

துப்பரவு செய்வது, பழைமையை விரும்புவது
தாய் தந்தையரை மதிப்பது
நண்பரைத் தேடுவது
வீடு வீடாய் சென்று மகிழ்வை கொண்டாடி உண்ணுவது…….
கலாச்சாரத்தின் விருந்தோம்பல்

எமது நாட்டில்
இவை தரும் இன்பங்கள்
இயற்கை தரும் நினைவுகள்
தென்றல் காற்று வீசி, இன்பம் தரும் காலநிலைகள்
இதுவல்வோ வாழ்க்கை இதுவல்லவோ சொர்க்கம்
இறைவா ஒரு வரம் தாரும் வழியை மாற்றிவிடும்….
நாம் இங்கு புலம் பெயர்ந்து நரகத்தில் வாழ்கின்றோம் …..
நாடு செல்ல, அமைதியாக வாழ வழி கொடும்…..
தமிழா  அதற்கு முன் நீ ஒன்று செய்யவேண்டும் ஒன்று படு உன் இனத்தை நேசி

மனதில் ஆயிரம் சுமைகள்
வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள்
உடலில் ஆயிரம் நோய்க்கள்
இதயத்தில் பல வலிகள்
கைகளில் பல ஏக்கங்கள்
கால்களில் பல அவ நம்பிக்கைகள்
வாழ்வனோ, நடப்பனோ, இருப்பனோ, சாவனோ, சாதிப்பேனோ, உதவிடுவேனோ
துடிக்கிறது எண்ணங்கள் என்ன செய்வது….. எப்படி ஆறுவது …….

ஏழை சாப்பிட வழியில்லை
நோயாளியைக் குணப்படுத்தப் பணமில்லை
படிக்க உழைக்க உதவியில்லை
எம்மை நினைக்க நாதியில்லை
தமிழனே என்ன பழி செய்தாய் இப்படி வீழ்ந்தாய்

எழ உன் இனம் நினைக்கவில்லை
ஏன் சேர்ந்து முடிவெடுக்க முடியவில்லை
பிரித்து ஆளுகிறார்களா பிரிந்து போகிறார்களா ஏன் ….

அடிப்படையில் அன்பில்லை
அரசியல் சிறப்பு சாணக்கியம் அறவேயில்லை
எமது இனத்தில் அக்கறையில்லை
எமது மொழியைக் காக்க பேச முடியவில்லை,
ஒரு தமிழனைக் கண்டால் பார்க்காமலே செல்கிறான்
பேச எங்கே முடியும்…. தனித்துவிட்டார்கள் தமிழர்கள்
சாதிக்கமுடியாது இதனால்…..

படம் பாப்போம்
நாடகம் பாப்போம்
மேடைகளில் வீரியம் பேசுவோம்,
நாட்டியம் ஆடுவோம்
இவை எமது இனத்தைக் காக்குமா……..

திட்டமில்லை
தீர்வு இல்லை
ஒற்றுமையில்லை
இரக்கமில்லை
எதிர்கால சிந்தனையில்லை
மற்றவர் கருத்தை மதிப்பதில்லை
எப்படி பகை வெல்வது………. முடியாது

காலன் வரும் முன் உன் கடமையைச் செய்
காலம் போகும் முன் உன் கனவை நனவாக்கு
கருணை கொண்டு நீ கடந்து செல்
உன் இனத்தை நினைத்து நீ எமது நாடு செல்
காட்டு வழியில் செல்கின்றோம் - கொஞ்சம்
கண்ணைவிழித்து உன் இனத்தைப் பார்

கடவுள் நினைத்தால் நனவாகும் - அதை
கருத்தில் கொண்டால் எம் இனம் வாழும்
கடமை என்பது இருந்தால் நீதி நியாயம் அன்பு அறம் எல்லாம் வரும்
கரிகாலா மீண்டும் தமிழன் வரலாறு தொடர
நல்ல தமிழா சேர சோழ பாண்டியா - வா

என்நாடே உன்னோடு நான் வாழ வழி செய்யும்
வாழ்ந்து இவ்வுலகம் விட்டு போக
இயற்கையே வழி செய்யும்……
அழுதுகொண்டு பிறந்து அழுதுகொண்டு போகின்றோம்
மகிழ்ச்சியோடு திருப்பதியோடு கௌரவத்தோடு போகவிடும்

நல்ல அரசியல்வாதியாய், இலட்சியவாதியாய்
நல்ல கல்விமானாய் குறிப்பாக நல்ல மனிதனாய்
மதிப்பிற்குரிய சிங்கைப் பிரதமர் லீக்குவான்யு அவர்கள் போல்
தமிழா 2021ல் யாராவது வாருங்ளேன்

சனி பகவானே உன் வீரிய சக்தியை, நியாயத் தீர்ப்பைக் கொடும்
பொங்கலோ பொங்கல்…………

2021 தமிழ் ஆண்டு தான் வெற்றி நிற்சயமே.

அல்லையூர் அருள் தெய்வேந்திரன் சுவிசர்லாந்து (சோதிடர் கவிஞர்)
Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu